ADDED : செப் 25, 2026 06:33 PM
கோவை, செப்.26–
ரத்தினம் குளோபல் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு டி.சி.எப்.எஸ். பயிலும் மாணவியும், 2 டி.என். பீரங்கி படை என்.சி.சி. பிரிவைச் சேர்ந்த கேடட்டுமான சி.யு.ஓ. பூங்குழலி, தேசிய அளவிலான என்.சி.சி. போட்டிகளில் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
2025ம் ஆண்டு குழுக்களுக்கு இடையிலான போட்டியில் பங்கேற்ற இவர், தொடர்ந்து தால் சைனிக் முகாம் தேர்வு மற்றும் பயிற்சியில் ஈடுபட்டார்.
இதன் பலனாக, 2026ம் ஆண்டு டில்லியில் நடந்த அகில இந்திய தால் சைனிக் முகாமில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டார். இதில் நடந்த ஜே.டி.எப்.எஸ். போட்டியில் அகில இந்திய அளவில் 6-வது இடம் பெற்றார்.
2026ல் குழுக்களுக்கு இடையிலான போட்டியில் சேவை பாடத்திட்டம் மற்றும் ஜே.டி.எப்.எஸ். ஆகிய இரு பிரிவுகளிலும் தங்கப்பதக்கம் வென்றார். ஒரே போட்டியில் 2 தங்கப்பதக்கங்களை வென்ற பூங்குழலியை, பல்கலைக்கழக என்.சி.சி. அணி, ஆசிரியர்கள், சக கேடட்கள் பாராட்டினர்.
