ADDED : செப் 25, 2026 06:44 PM
கோவை: பேங்க் ஆஃப் இந்தியாவின் கோவை மண்டல அலுவலகத்தில் கண்காணிப்பு விழிப்புணர்வு பிரசாரம்–2026 நிகழ்ச்சி நடந்தது.
நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் ஊழலற்ற நிர்வாகத்தை வலியுறுத்தும் வகையில் நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற வங்கி ஊழியர்கள், நேர்மையுடன் செயல்படுவோம் என உறுதிமொழி ஏற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய மண்டல மேலாளர் ரஞ்சித் குமார், வங்கியின் அன்றாட செயல்பாடுகளில் தடுப்புக் கண்காணிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். ஊழலற்ற அணுகுமுறையைப் பின்பற்றுவதுடன், வாடிக்கையாளர் மற்றும் நிர்வாக சேவைகளில் முழுமையான வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என ஊழியர்களை கேட்டுக்கொண்டார்.
புதுப்பிக்கப்பட்ட இணக்க வழிகாட்டுதல்கள், டிஜிட்டல் கண்காணிப்பு நடவடிக்கைகள் மற்றும் உள்ளக முறைகேடுகளைத் தெரிவிக்கும் வழிமுறைகள் குறித்து தகவல் அமர்வு நடந்தது. இதில் தலைமை ஊழல் தடுப்பு அதிகாரி அமித் பிரதான், துணை மண்டல மேலாளர் சிவசுப்ரமணியன் மற்றும் வங்கி ஊழியர்கள் பங்கேற்றனர்.
