sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி: கோவை கூடைப்பந்து கழக அணி வெற்றி

/

தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி: கோவை கூடைப்பந்து கழக அணி வெற்றி

தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி: கோவை கூடைப்பந்து கழக அணி வெற்றி

தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி: கோவை கூடைப்பந்து கழக அணி வெற்றி


ADDED : மே 30, 2025 12:08 AM

Google News

ADDED : மே 30, 2025 12:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : கோவை மாநகராட்சி உள்விளையாட்டு அரங்கத்தில் ஆண்கள், பெண்களுக்கான தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் நேற்று முன்தினம் முதல் நடந்து வருகிறது; ஜூன், 1ம் தேதி நிறைவடைகிறது.

'லீக்' மற்றும் 'நாக்-அவுட்' முறையில் போட்டிகள் நடக்கிறது. ஆண்களுக்கான போட்டியில், பெங்களூரு பாங்க் ஆப் பரோடா அணியும், கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணியும் மோதின. இதில், கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணி, 90-74 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றது.

இரண்டாம் போட்டியில், இந்திய கப்பல் படை அணியும், சென்னை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணியும் விளையாடியது. இதில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி, 76-67 என்ற புள்ளிகளில் வெற்றிபெற்றது.

பெண்களுக்கான போட்டியில் சென்னை வருமான வரி அணியும், திருவனந்தபுரம் கேரளா காவல் துறை அணியும் மோதின. இதில், வருமான வரி அணி, 60-49 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றது. திருவனந்தபுரம் கேரள மாநில மின் வாரிய அணியும், தென் மேற்கு ரயில்வே அணியும் விளையாடியது. இதில், கேரள மாநில மின் வாரிய அணி, 77-74 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றது.

ரைசிங் ஸ்டார்ஸ் அணியும், கேரள மாநில மின்வாரிய அணியும் மோதியது. இதில், கேரள மின் வாரிய அணி, 75-43 என்ற புள்ளிகளில் வென்றது. தொடர்ந்து, போட்டிகள் நடக்கின்றன.






      Dinamalar
      Follow us