ADDED : ஆக 25, 2025 12:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர்; கோவை, போத்தனூரிலிருந்து செட்டிபாளையம் செல்லும் வழியில் அம்பேத்கர் நகர் உள்ளது. இங்கு தனியார் பள்ளி அருகே தேசிய அளவிலான மண் சாலை பைக் பந்தயம் (டர்ட் ரேஸ்) நேற்று நடந்தது.
பாரீன் எக்ஸ்பர்ட், எக்ஸ்பர்ட் கிளாஸ் என 24 பிரிவுகளில், மைசூரு, குஜராத், கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த, 240 வீரர்கள் பங்கேற்றனர். 500 மீட்டர் கொண்ட பந்தய சாலையில் ஒவ்வொரு பிரிவும், 10 சுற்றுகளை கொண்டதாக (5 கி.மீ.) நடந்தது. வீரர்கள் மண் புழுதி பறக்க தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். இதில் பாரீன் எக்ஸ்பர்ட் பிரிவில் மைசூருவை சேர்ந்த தன்வீர் முதலிடம் பிடித்தார். வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை பரிசாக வழங்கப்பட்டது. லாபி ரேஸிங் அமைப்பினர் பந்தயத்தை ஒருங்கிணைத்தனர்.