/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய அளவிலான கராத்தே; சூலூர் பள்ளி மாணவர் தேர்வு
/
தேசிய அளவிலான கராத்தே; சூலூர் பள்ளி மாணவர் தேர்வு
ADDED : அக் 14, 2024 11:28 PM

சூலூர் : தேசிய அளவிலான கராத்தே போட்டியில் விளையாட, பள்ளபாளையம் விவேகானந்த கல்வி நிலைய மாணவன் தேர்வு பெற்றுள்ளார்.
2024---25 ஆண்டுக்கான, 68 வது இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம், மாநில அளவிலான கராத்தே தெரிவு போட்டி, சிவகங்கை மாவட்டம் ஸ்ரீ ராஜ ராஜன் பொறியியல் கல்லூரியில் நடந்தது.
இதில், கோவை மாவட்டம் பள்ளபாளையம் விவேகானந்த கல்வி நிலைய மாணவன், முகைதீன் அபினாஷ் 14 வயதுக்கு உட்பட்ட, 50 கிலோ எடை பிரிவில் தேசிய அளவிலான போட்டிகளில் விளையாட தேர்வு பெற்றுள்ளார். வரும், டிச., மாதம், 11 ம்தேதி துவங்கும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளார்.
தேசிய போட்டியில் பங்கேற்க உள்ள மாணவனை, பள்ளி இயக்குனர் சுந்தரநாதன், முதல்வர் வனிதா மணி, உடற்கல்வி ஆசிரியர் அஜீத்குமார், கராத்தே பயிற்சியாளர் அறிவழகன், நாசர்தீன் ஆகியோர் பாராட்டினர்.