தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கம் 

தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கம் 

தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கம் 


ADDED : ஏப் 09, 2025 10:15 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2025 10:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி; பொள்ளாச்சி, பி.ஏ., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில், அறிவியல் மற்றும் மனித பண்பாட்டியல் சங்கம் சார்பில் தேசிய அளவில் தொழில்நுட்ப கருத்தரங்கு நடந்தது. கல்லுாரி தலைவர் அப்புக்குட்டி தலைமை வகித்தார். முதல்வர் மணிகண்டன் முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக, சென்னை சாப்ட்வேர் இன்ஜினியர் சிபி ஆதாஷ் கலந்து கொண்டார். தொடர்ந்து, அவர், ஏ.ஐ., ஆதிக்கம் செலுத்தும் உலகில் மாணவர்கள் தங்களை எவ்வாறு தயார்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவர்கள் தங்களின் திறமைகளை அடையாளம் கண்டு, அதன் அடிப்படையில் செயல்பட வேண்டும். நேர்காணலில் ஆங்கிலத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கிப் பேசினார்.

தொடர்ந்து, பிராஜெக்ட் டிஸ்பிளே, பேப்பர் பிரசன்டேஷன், வினாடி-வினா மற்றும் சர்ப்பிரைஸ் நிகழ்வுகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முதலாமாண்டு துறைத்தலைவர் யுவராஜா, பிற துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us