/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய அளவிலான யோகா; கோவை மாணவி முதலிடம்
/
தேசிய அளவிலான யோகா; கோவை மாணவி முதலிடம்
ADDED : ஆக 07, 2025 10:44 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார்; தெலுங்கானாவில் நடந்த தேசிய அளவிலான யோகாசன போட்டியில், கோவை மாணவி சாம்பியன் பட்டம் வென்றார்
தெலுங்கானா மாநிலத்தில் சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையிலான தேசிய அளவிலான யோகாசன போட்டிகள், கடந்த ஜூலை, 30 முதல், ஆக., 2 வரை நடந்தன. இதில், பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
17 வயதுக்கு உட்பட்டோருக்கான ரிதமிக் பிரிவில், தெக்கலுார் சக்தி இண்டர்நேஷனல் பள்ளியில் படிக்கும், கோவை சின்னியம்பாளையத்தை சேர்ந்த, பிரித்திகா, முதலிடம் பெற்று, சாம்பியன் கோப்பையை வென்றார். அவருக்கு, பள்ளி நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் மற்றும் பெற்றோர் வாழ்த்து தெரிவித்தனர்.