ADDED : ஜன 08, 2024 01:16 AM
பொள்ளாச்சி;உத்தரகாண்ட் மாநிலத்தில் தேசிய அளவிலான யோகாசன போட்டி நடைபெற்றது. அதில், தமிழகம், உத்தரப்பிரதேசம் மத்திய பிரதேசம் மற்றும் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து, 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
பொள்ளாச்சி ஸ்ரீ மிருத்ஞ்சியா ஸ்போர்ட்ஸ் அகாடமியை சேர்ந்த மாணவ மாணவியர் பங்கேற்று வென்றனர். அதில், 10 வயது பிரிவில் தருண் ஹரிவர்யா, சம்பிரூத் பூர்ணஸ்ரீ ஆகியோர் முதல் பரிசை பெற்றனர். தொடர்ந்து, 18 வயது பிரிவில் சாய் நித்திஷ் கோகுல கிருஷ்ணன் ஆகியோர் முதல் பரிசை பெற்றனர். இதையடுத்து, வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை, சப் -கலெக்டர் கேத்திரின் சரண்யா பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ மிருத்ஞ்சியா ஸ்போர்ட்ஸ் பயிற்சியாளர் பிரகாஷ் மற்றும் பொள்ளாச்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை தலைவர்நடராஜ் மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் தனலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.