நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் கிளை 2 நூலகத்தில், 58வது தேசிய நூலக வார விழா கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு நூலகர் கவுசல்யா தலைமை வகித்து வரவேற்றார். வாசகர் வட்டத் தலைவர் மற்றும் நூலக நண்பர் திட்ட தன்னார்வலர் ஜெயராமன், புத்தகங்கள் வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து பேசினார். விழாவில் ஏராளமான வாசகர்கள் பங்கேற்றனர். சுதந்திராபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள், நூலக உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர்.

