தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நேஷனல் மாடல் மெட்ரிக் பள்ளி 39 வது ஆண்டு விழா

 நேஷனல் மாடல் மெட்ரிக் பள்ளி 39 வது ஆண்டு விழா

 நேஷனல் மாடல் மெட்ரிக் பள்ளி 39 வது ஆண்டு விழா


ADDED : ஜன 30, 2026 05:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 30, 2026 05:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: ''சாதிப்பவர்கள் தான் நிலைத்து நிற்பர்,'' என, பல்கலை மானியக்குழு - மாளவியா மிஷன் ஆசிரியர் பயிற்சி மைய இயக்குனர் சுரேஷ்பாபு பேசினார்.

கோவை பீளமேடு நேஷனல் மாடல் மெட்ரிக், மேல்நிலைப் பள்ளியின், 39 வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது.

பல்கலை மானியக்குழு - மாளவியா மிஷன் ஆசிரியர் பயிற்சி மைய இயக்குனர் சுரேஷ்பாபு பேசுகையில்,''ஆசிரியர்கள் பெற்றோரை விட மேலானவர்கள். அவர்கள் தான் மாணவர்களை சாதனையாளர்களாக மாற்றுகின்றனர். மாணவர்களை பெற்றோர்கள் நிர்பந்திக்க கூடாது. அவர்கள் என்னவாக வேண்டும் என நினைக்கின்றனரோ அதற்கு வழி விட வேண்டும். இந்தியர்கள் இன்று பல நாடுகளிலும் சாதித்து வருகின்றனர். சாதிப்பவர்கள் தான் நிலைத்து நிற்பர். பெற்றோர், ஆசிரியர்கள் அனுபவசாலிகள். அவர்களை மதித்தால் உலகில் சிறந்தவர்களாக மாறலாம்,'' என்றார்.

துணை முதல்வர் வனிதா வரவேற்றார். முதல்வர் பேபி தலைமை வகித்தார். பள்ளியின் நிர்வாக இயக்குனர் மோகன் சந்தர், செயலாளர், உமா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சிறந்த மாணவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us