/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நேஷனல் மாடல் பள்ளியின் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
/
நேஷனல் மாடல் பள்ளியின் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
நேஷனல் மாடல் பள்ளியின் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
நேஷனல் மாடல் பள்ளியின் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
ADDED : டிச 06, 2024 04:51 AM
கோவை : நேஷனல் மாடல் குழும பள்ளிகள் சார்பில், ஆண்டுதோறும், மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் கருத்தரங்கு நடத்தப்படுகிறது. மூன்றாவது ஆண்டாக நடப்பாண்டு கருத்தரங்கு, பள்ளி வளாகத்தில் இன்று துவங்குகிறது; நாளை நிறைவடைகிறது.
செய்தியாளர்களிடம் நேஷனல் மாடல் குழும பள்ளிகள் துணைத்தலைவர் பிரதீப்குமார் கூறியதாவது:
ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ், 2 வரையிலான மாணவர்களுக்கு இந்த கருத்தரங்கு நடத்தப்படுகிறது. மாணவர்களுக்கு உயர்கல்வியில், உள்ள பல்வேறு படிப்புகள், அத்துறைகளில் உள்ள வாய்ப்புகள் குறித்து தெரிந்திருக்கவில்லை. மாணவர்களுக்கு உரிய விளக்கம் அளிக்கும் போது அவர்கள் தங்கள் எதிர்கால இலக்கு அறிந்து அதற்கு ஏற்ற கல்வியை தேர்ந்தெடுக்க முடியும்.
போட்டித்தேர்வுகள் குறித்தும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. இதில், 27 நிபுணர்கள் பல்வேறு துறைகளில் கருத்துக்களை வழங்க உள்ளனர். மொத்தம், 2,000 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். அதேபோல், பள்ளியில், சகோதயா கூட்டமைப்பின் பள்ளிகளுக்கு இடையேயான ஹேண்ட்பால் போட்டிகள் நடந்து வருகின்றன.
இவ்வாறு, அவர் கூறினார்.நேஷனல் மாடல் குழும பள்ளிகள் இயக்குனர் பானுமதி, நேஷனல் மாடல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பேபி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.