UPDATED : ஜூன் 14, 2026 06:37 PM
ADDED : ஜூன் 14, 2026 06:31 PM

கோவை: கங்கா நர்சிங் கல்லுாரி சார்பில், 'கலப்பு ஆராய்ச்சி முறைகளின் புதிய பரிமாணங்கள்' என்ற தலைப்பில் தேசிய அளவிலான செவிலியர் ஆராய்ச்சி மாநாடு நடந்தது. மாநாட்டின் தலைமை விருந்தினராக பங்கேற்ற தமிழ்நாடு செவிலியர், தாதியர் குழுமத்தின் பதிவாளர் டாக்டர் சங்கர் சண்முகம், சிக்கலான சுகாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண கலப்பு ஆராய்ச்சி முறையின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டினார்.
மாநாட்டில் நாடு முழுவதும் இருந்து நர்ஸ்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், சுகாதார நிபுணர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். கலப்பு ஆராய்ச்சி முறையில் உருவாகி வரும் புதிய போக்குகள், புதுமைகள் மற்றும் சவால்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. கங்கா மருத்துவமனை மற்றும் கங்கா நர்சிங் கல்லுாரியின் நிர்வாக இயக்குநர் கனகவல்லி, இயக்குநர்கள் ராஜசபாபதி, ராஜசேகரன் மற்றும் அறங்காவலர்கள் நிர்மலா, ரமா ஆகியோர் பங்கேற்றனர்.
