/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய அறிவியல் தின போட்டி; அரசு பள்ளி மாணவிகள் சாதனை
/
தேசிய அறிவியல் தின போட்டி; அரசு பள்ளி மாணவிகள் சாதனை
தேசிய அறிவியல் தின போட்டி; அரசு பள்ளி மாணவிகள் சாதனை
தேசிய அறிவியல் தின போட்டி; அரசு பள்ளி மாணவிகள் சாதனை
ADDED : ஏப் 16, 2025 10:25 PM

கோவை; தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில், கோவை கொடிசியா வளாகத்தில் அண்மையில் நடைபெற்ற, தேசிய அறிவியல் தின விழாவில், ஒண்டிப்புதூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றனர்.
தேசிய அறிவியல் தினத்தையொட்டி, ஆண்டுதோறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் போட்டியில், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த, 4,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். வண்ணம் தீட்டுதல், வினாடி -வினா, கட்டுரைப் போட்டி உள்ளிட்ட பல்வேறு அறிவியல் சார்ந்த போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், கோவை ஒண்டிப்புதூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த சஞ்சனாஸ்ரீ மற்றும் சத்யப்பிரியா ஆகிய மாணவிகள், திறனறி தேர்வில் சான்றிதழும், பரிசுத் தொகையும் பெற்றனர்.
படம் வரைதல், வினாடி-வினா, கட்டுரை உள்ளிட்ட போட்டிகளில் மாணவிகள் பரிசுகளை வென்றனர்.