/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய மூத்தோர் கூடைப்பந்து போட்டி: கோவை உடற்கல்வி இயக்குனர்கள் 'சூப்பர்'

ADDED : பிப் 16, 2024 01:45 AM

கோவை;மாஸ்டர்ஸ் கேம்ஸ் அசோசியேஷன் கோவா சார்பில் மூத்தோருக்கான 6ம் ஆண்டு தேசிய மாஸ்டர்ஸ் விளையாட்டு போட்டிகள் கோவாவில் பிப்., 8ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடந்தன. இதில் தடகளம், வில்வித்தை, கூடைப்பந்து, இறகுப்பந்து, செஸ், கால்பந்து, ஹாக்கி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் பெண்கள் கூடைப்பந்து போட்டி, 30+,35+,40+,45+, 50+ ஆகிய வயது பிரிவின் அடிப்படையில் நடத்தப்பட்டது. தமிழகம் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 64 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில், ரத்தினம் கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் ஜாய்சி, 35+ மற்றும் 40+ வயது பிரிவிலும், கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் ஜெயசித்ரா 30+ மற்றும் 40+ ஆகிய வயது பிரிவிலும் தமிழக அணியில் தேர்வாகினர். இப்போட்டியில், தமிழக அணி 35+ பிரிவில் தங்கப்பதக்கமும், மற்ற நான்கு பிரிவுகளில் வெள்ளிப்பதக்கமும் வென்று அசத்தியது.
இதில் சிறப்பாக செயல்பட்டு மாநில அணியின் வெற்றிக்கு உதவியதோடு, மாணவியருக்கு முன்னுதாரணமாக விளங்கிய கோவை கல்லுாரி உடற்கல்வி இயக்குனர்கள் ஜாய்சி மற்றும் ஜெயசித்ராவை கல்லுாரி நிர்வாகத்தினர், கூடைப்பந்து பயிற்சியாளர்கள், வீரர்கள் என பலர் பாராட்டினர்.