/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய விளையாட்டு மாணவர்கள் தேர்வு
/
தேசிய விளையாட்டு மாணவர்கள் தேர்வு
ADDED : நவ 09, 2025 11:17 PM

மேட்டுப்பாளையம்: தேசிய விளையாட்டுப் போட்டிகளில் விளையாட, மேட்டுப்பாளையம் மெட்ரோ பள்ளி மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர்.
பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாணவ, மாணவியருக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள், தஞ்சாவூரில் நடந்தன. மேட்டுப்பாளையம் மெட்ரோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஜோய் அகஸ்டின், ஈட்டி எறிதல் போட்டியில் முதலிடம் பெற்றார்.
இவர், ஹரியானாவில் நடக்கும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியிலும், தடை தாண்டும் ஓட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற சாணக்யா, மத்தியப்பிரதேசத்தில் நடக்கும் தேசிய விளையாட்டுப் போட்டியிலும் விளையாட, தேர்வு பெற்றுள்ளனர்.
பள்ளியில் நடந்த விழாவில், முதல்வர் சுலோச்சனா வரவேற்றார். காரமடை இன்ஸ்பெக்டர் முருகையன், மாணவர்களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கினார். பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

