/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இரண்டாம் நிலை காவலர்களை தேர்வு செய்ய எழுத்துத்தேர்வு
/
இரண்டாம் நிலை காவலர்களை தேர்வு செய்ய எழுத்துத்தேர்வு
இரண்டாம் நிலை காவலர்களை தேர்வு செய்ய எழுத்துத்தேர்வு
இரண்டாம் நிலை காவலர்களை தேர்வு செய்ய எழுத்துத்தேர்வு
ADDED : நவ 09, 2025 11:17 PM
கோவை: தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் இரண்டாம் நிலை காவலர், சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான, 2,833 போலீசாரை தேர்வு செய்ய, நேரடி எழுத்து தேர்வு நேற்று நடந்தது.
மாநிலம் முழுவதும், 45 மையங்களில் இத்தேர்வு நடந்தது. கல்வித் தகுதியாக, 10 ம் வகுப்பு தேர்ச்சியாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பட்டதாரி, இன்ஜினியரிங் முடித்தவர்களும் விண்ணப்பித்திருந்தனர்.
தமிழை ஒரு பாடமாக பயின்றவர்கள் மட்டும், தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். முதன்மை எழுத்து தேர்வுக்கு, 70 மதிப்பெண்கள், உடற்தகுதிக்கு, 24, சிறப்பு மதிப்பெண்கள், 4 என, மொத்தம், 100 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
தேர்வு எழுத வந்தவர்களை, போலீசார் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். மொபைல்போன், புளூடூத், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களுக்கு, அனுமதி மறுக்கப்பட்டது.
கோவை மாநகரில், பி.எஸ்.ஜி., என்.ஜி.பி. கலை, அறிவியல் கல்லுாரிகளில் இத்தேர்வு நடந்தது. கோவையில் 2ம் நிலை காவலர் தேர்வுக்கு, 1,842 பேர் விண்ணப்பித்திருந்தனர். இரு மையங்களில் நடந்த தேர்வில், மொத்தம் 1,523 பேர் எழுதினர்; 319 பேர் தேர்வு எழுதவில்லை.
கோவை மாவட்டத்தில் தேர்வில் பங்கேற்க, 2,582 பேர் விண்ணப்பித்திருந்தனர். எஸ்.என்.எஸ்., கலை, அறிவியல் கல்லுாரியில் நேற்று நடந்த தேர்வில், 2,061 பேர் தேர்வு எழுதினர்; 521 பேர் தேர்வு எழுத வரவில்லை.
தேர்வு மையங்களை, போலீஸ் கமிஷனர் சரவணசுந்தரும், மேற்கு மண்டல ஐ.ஜி., செந்தில்குமார், எஸ்.பி.,கார்த்திகேயன் ஆகியோரும் தனித்தனியாக ஆய்வு செய்தனர்.

