/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய நீச்சல் வாட்டர்போலா மாணவர்கள் பங்கேற்பு
/
தேசிய நீச்சல் வாட்டர்போலா மாணவர்கள் பங்கேற்பு
ADDED : ஆக 15, 2025 08:56 PM

பொள்ளாச்சி; தேசிய அளவிலான நீச்சல் வாட்டர்போலோ போட்டியில், பொள்ளாச்சி மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
தேசிய அளவிலான, 79வது சீனியர் நீச்சல் வாட்டர்போலோ விளையாட்டு போட்டி, குஜராத் மாநிலத்தில் நடக்கிறது. அதில், பல்வேறு மாநிலங்களில் இருந்து நீச்சல் வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த போட்டியில், தமிழ்நாடு வாட்டர்போலோ அணி சார்பாக, பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லுாரி மாணவர் பிரநித் சரவண பிரகாஷ், குமரகுரு கல்லுாரி மாணவர் ரிதன் நிதீஷ், மத்திரா ஸ்ரீயா ஆகியோர் பங்கேற்கின்றனர். போட்டியில் பங்கேற்க சென்ற வீரர்களை கல்லுாரி நிர்வாகம், நீச்சல் பயிற்றுநர் வினோத், பிட்னஸ் பயிற்றுனர் பழனிவேல் ஆகியோர் பாராட்டினர்.

