/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய 'டேக்வாண்டோ' ; கோவை மாணவர்கள் அசத்தல்
/
தேசிய 'டேக்வாண்டோ' ; கோவை மாணவர்கள் அசத்தல்
ADDED : டிச 04, 2024 10:27 PM

கோவை; தேசிய அளவிலான 'டேக்வாண்டோ' போட்டியில், கோவை வீரர்கள் பதக்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
தேசிய அளவிலான, 38வது 'சப் ஜூனியர் கியோருகி டேக்வாண்டோ' சாம்பியன்ஷிப் போட்டி, ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் நடந்தது. கோவையை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் உட்பட, தமிழகத்தை சேர்ந்த, 120 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
இதில், 18 வயதுக்குட்பட்டோர் எடை பிரிவில் ஸ்ரீஜித் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். அதேபோல், உத்தரகண்ட் மாநிலத்தில் நடந்த சி.பி.எஸ்.இ., தேசிய டேக்வாண்டோ 'சாம்பியன்ஷிப்' போட்டியில், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில், மாணவி அனுஹாசினி தங்கம் வென்று, பெருமை சேர்த்துள்ளனர். வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பயிற்சியாளர் பிரபு, ஆசிரியர்கள், பெற்றோர் வாழ்த்து தெரிவித்தனர்.