/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய டேக்வாண்டோ போட்டி கோவை மாணவியர் தேர்வு
/
தேசிய டேக்வாண்டோ போட்டி கோவை மாணவியர் தேர்வு
ADDED : பிப் 22, 2024 06:15 AM

கோவை: புதுச்சேரியில் நடக்கவுள்ள, கேலோ இந்திய பெண்கள் லீக் டேக்வாண்டோ போட்டிக்கு, கோவை மாணவியர் நான்கு பேர் தேர்வாகியுள்ளனர்.
தேசிய அளவில் பெண்களுக்கான, கேலோ இந்திய பெண்கள் லீக் விளையாட்டு போட்டிகள், நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடக்கிறது.
அதன் ஒரு பகுதியான, டேக்வாண்டோ முதல் கட்ட தேசிய போட்டிகள் புதுச்சேரியில், பிப்., 27ம் தேதி முதல் மார்ச் 1ம் தேதி வரை நடக்கிறது.
இப்போட்டியில் பங்கேற்பதற்கான தமிழக அணி தேர்வு, சேலம் மாவட்டத்தில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தில் (சாய்) நடந்தது. இதில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வீராங்கனையினர் பங்கேற்றனர்.
கோவையில் இருந்து, கிருஷ்ணம்மாள் கல்லுாரி மாணவி பவதாரணி, ஜி.எஸ்.உடற்கல்வியியல் கல்லுாரி மாணவி யோகஸ்ரீ, எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி மாணவி மதுமிதா மற்றும் எஸ்.ஆர்.பி., அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி அனன்யா சிங் ஆகியோர், வெவ்வேறு பிரிவுகளில் போட்டியிட, தேர்வாகி அசத்தினர்.
தேசிய போட்டிக்கு தேர்வான மாணவியரை, கோவை மாவட்ட ஸ்போர்ட்ஸ் டேக்வாண்டோ சங்க தலைவர் லட்சுமண நாராயணன், செயலாளர் சிஜூ குமார் ஆகியோர் பாராட்டினர்