/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய வாக்காளர் தினம்: விழிப்புணர்வு ஊர்வலம்
/
தேசிய வாக்காளர் தினம்: விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : ஜன 28, 2024 11:33 PM

கூடலூர்:கூடலூரில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கூடலூர் நகராட்சி அலுவலகத்தில் துவங்கியது. ஊர்வலத்தை கூடலூர் ஆர்.டி.ஓ., முகமதுகுதரதுல்லா தலைமை ஏற்று துவக்கி வைத்தார். ஊர்வலத்தில், 'தேர்தல்களில் அனைவரும் அச்சமின்றி ஓட்டளிக்க வேண்டும்' என, கோஷங்கள் எழுப்பினர். ஊர்வலம் ஊட்டி - மைசூரு தேசிய நெடுஞ்சாலை, பழைய கோர்ட் சாலை வழியாக ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நிறைவு பெற்றது.
ஊர்வலத்தில், கூடலூர் அரசு கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், டி.எஸ்.பி., செல்வராஜ், தாசில்தார் ராஜேஸ்வரி, நகராட்சி தலைவர் பரிமளா, ஓவேலி பேரூராட்சி தலைவர் சித்ராதேவி, துணை தலைவர் சகாதேவன், தேவர்சோலை பேரூராட்சி துணை தலைவர் யுனுஸ் பாபு,ரோட்டரி கிளப் நிர்வாகிகள், மாணவர்கள் பங்கேற்றனர்.