தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

 தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

 தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி


UPDATED : ஜன 25, 2026 05:37 AM

ADDED : ஜன 25, 2026 05:36 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 25, 2026 05:37 AM ADDED : ஜன 25, 2026 05:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, வேளாண் பல்கலையில், வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

தேர்தல் ஆணையத்தின் 16வது வாக்காளர் தினம் இன்று (ஜன., 25 ம் தேதி) கடைபிடிக்கப்படுகிறது. 'என் இந்தியா என் வாக்கு' என்ற வாசகத்தை மையக்கருத்தாக கொண்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதன் ஒருபகுதியாக நேற்று, வேளாண் பல்கலையில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.



இதில், வாக்காளர் தின 'லோகோ'வடிவில், மாணவர்கள் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சிலம்பாட்டம், ஒயிலாட்டம், புலியாட்டம், வில்லுப்பாட்டு உள்ளிட்ட பாரம்பரிய கலைகள், மாநகராட்சி கலைக்குழு மாணவர்கள் சார்பில் அரங்கேற்றப்பட் டது. வாக்களார் பட்டியலில் பெயர் சேர்த்தல், தவறாமல் வாக்களித்தல், குடும்பத்தில் உள்ளோரை வாக்களிக்க ஊக்குவித்தல் குறித்து, உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியை, உதவி கலெக்டர் பிரசாந்த் துவக்கி வைத்தார். வாக்காளர் பதிவு அலுவலர் வாணிலட்சுமி ஜெகதாம்பாள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் துரைமுருகன், கல்லுாரி டீன் ஜெயராமலிங்கம் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us