/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வரும் 25ம் தேதி தேசிய வாக்காளர் தினம் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்: கலெக்டர்
/
வரும் 25ம் தேதி தேசிய வாக்காளர் தினம் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்: கலெக்டர்
வரும் 25ம் தேதி தேசிய வாக்காளர் தினம் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்: கலெக்டர்
வரும் 25ம் தேதி தேசிய வாக்காளர் தினம் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்: கலெக்டர்
ADDED : ஜன 16, 2025 03:44 AM
கோவை : வரும் 25ம் தேதி 15வது தேசிய வாக்காளர் தினத்தை விமரிசையாக கொண்டாடி, வாக்காளர்களிடம் ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
கோவை கலெக்டர் அலுவலகத்தில், நேற்று முன் தினம் அனைத்து துறை அலுவலர்கள், அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், கலெக்டர் கிராந்திகுமார் தலைமையில் நடந்தது.
இதில் கலெக்டர் கிராந்தி குமார் பேசியதாவது:
ஒவ்வொரு ஆண்டும் ஜன.,25ல் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு வரும் 25ல், தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது.
தேசிய வாக்காளர் தின குறிக்கோளான, 'வாக்களிப்பதே சிறந்தது, நிச்சயம் வாக்களிப்பேன்' என்பதனை விளம்பரப்படுத்தும் பொருட்டு, சுவரொட்டிகள் மற்றும் பேனர்களை, அனைத்து பொது இடங்களிலும் வைக்க வேண்டும்.
இவ்விழாவில் பங்கேற்கும் வாக்காளர்களுக்கு ஓட்டுச்சாவடிகளில் அடிப்படை வசதிகள், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், வாக்காளர் உதவி செயலி நியாயமான முறையில் வாக்களித்தல், தபால் வாக்கு, குறித்து விழாவில் எடுத்துரைக்கப்பட வேண்டும். கிராம சபை கூட்டத்தில், இறுதி வாக்காளர் பட்டியலை, பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்.
இவ்வாறு, கலெக்டர் பேசினார்.
இக்கூட்டத்தில், மகளிர் திட்ட இயக்குனர் மதுரா, வடக்கு வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) செந்தில்வடிவு, தேர்தல் பிரிவு தாசில்தார் தணிகைவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

