ADDED : அக் 02, 2025 12:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்; துடியலூர் வித்ய விகாசினி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் தம்பு மேல்நிலைப்பள்ளி ஆகியன இணைந்து, நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நாட்டு நல பணி திட்ட முகாமை நடத்தியது.
நிகழ்ச்சியில், தம்பு மேல்நிலைப் பள்ளியின் கல்வி இயக்குனர் குணசேகரன், தலைமை ஆசிரியர் ரமேஷ் ஆகியோர் பங்கேற்று பேசினர். வித்யா விகாசினி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் மணிமாறன், நாட்டு நலப்பணி திட்டத்தின் குறிக்கோள் குறித்து விளக்கினார்.
வித்யா விகாசினி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திட்ட அலுவலர் சுரேஷ் குமார், தம்பு மேல்நிலைப்பள்ளி திட்ட அலுவலர் பாபு கலந்து கொண்டனர்.