/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய தொழிலாளர் கல்வி தினம் கொண்டாட்டம்
/
தேசிய தொழிலாளர் கல்வி தினம் கொண்டாட்டம்
ADDED : செப் 17, 2025 09:52 PM
பெ.நா.பாளையம் ; பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தேசிய மனித மேம்பாட்டு மையத்தில் தேசிய தொழிலாளர் கல்வி தினம் கொண்டாடப்பட்டது.
தேசிய மனித மேம்பாட்டு மையம், மத்திய அரசின் தேசிய தொழிலாளர் கல்வி வளர்ச்சி வாரியம் மற்றும் கேலக்ஸி ரோட்டரி சமுதாய குழு ஆகியன இணைந்து, தேசிய தொழிலாளர் கல்வி தினத்தை கொண்டாடியது. இயக்குனர் சகாதேவன் வரவேற்றார். கல்வி வாரிய மண்டல இயக்குனர் செண்பகராஜன் தலைமை வகித்து பேசுகையில், தொழிலாளர்கள் நாட்டின் நடப்புகளை தெரிந்து கொள்வதற்காக, தேசிய தொழிலாளர் கல்வி மற்றும் வளர்ச்சி வாரியம் துவக்கப்பட்டது. தற்போது, மத்திய, மாநில அரசு திட்டங்களை கிராமங்கள் தோறும் கொண்டு செல்லும் பணியில் இத்துறை ஈடுபட்டு வருகிறது. இது தவிர, மருத்துவ அடையாள அட்டை, தொழிலாளர்களுக்கான அடையாள அட்டை, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான அடையாள அட்டை போன்ற சேவைகளை பயனாளிகளுக்கு நேரடியாக சென்று சேரும்படி பணியாற்றி வருகிறது என்றார்.
நிகழ்ச்சியில், ரோட்டரி கேலக்ஸி சங்க தலைவர் வெங்கடேஷ், மாவட்ட வங்கி நிதிசார் கல்வி ஆலோசகர் ரவி மற்றும் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஒருங்கிணைப்பாளர் சரசு நன்றி கூறினார்.