ADDED : மார் 09, 2026 06:55 AM

பெ.நா.பாளையம்: தமிழ்நாடு வனத்துறை சார்பில் சின்னதடாகம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான இயற்கை பாதுகாப்பு சிறப்பு முகாம் நடந்தது. சின்னதடாகம் ரிசர்வ் வனப்பகுதிக்கு உட்பட்ட சின்னமலை சரகம் மற்றும் பொன்னூத்தம்மன் கோவில் சரகம் பகுதிகளில் மாணவர்களுக்கு இயற்கை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இதில், வனம் மற்றும் வனவிலங்குகளின் முக்கியத்துவம், அதை பாதுகாக்க வேண்டிய அவசியம், காட்டுத் தீயை தடுத்தல், வனவிலங்குகளுக்கான நீர் தேக்கங்களை உருவாக்குதல், வனவிலங்குகளை வேட்டையாடும் நபர்களுக்கு எதிரான நடவடிக்கைகள், வனத்துறை சார்பில், வனம் மற்றும் வனவிலங்குகளை காப்பாற்ற பின்பற்றப்படும் பல்வேறு தொழில்நுட்பங்கள் ஆகியவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டன.
கோவை மாவட்ட வனத்துறை சார்பில் இதுபோன்ற, 20க்கும் மேற்பட்ட இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றன.
