sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 இயற்கை தரிசிக்க... மனம் லயிக்க... பரவசம்! சிட்டாய் பறக்க வைக்கும் பரளிக்காடு சூழல் சுற்றுலா

/

 இயற்கை தரிசிக்க... மனம் லயிக்க... பரவசம்! சிட்டாய் பறக்க வைக்கும் பரளிக்காடு சூழல் சுற்றுலா

 இயற்கை தரிசிக்க... மனம் லயிக்க... பரவசம்! சிட்டாய் பறக்க வைக்கும் பரளிக்காடு சூழல் சுற்றுலா

 இயற்கை தரிசிக்க... மனம் லயிக்க... பரவசம்! சிட்டாய் பறக்க வைக்கும் பரளிக்காடு சூழல் சுற்றுலா


ADDED : பிப் 19, 2026 05:57 AM

Google News

ADDED : பிப் 19, 2026 05:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்: காரமடை அருகே பரளிக்காட்டில், வனத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் சூழல் சுற்றுலாவால், பழங்குடியினர் வேலை வாய்ப்பு பெற்று, வாழ்வாதாரம் மேம்பட்டுள்ளது.

காரமடை வனச்சரகத்துக்கு உட்பட்ட பரளிக்காடு, மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில், பில்லுார் அணைக்கு அருகில் உள்ளது. காரமடை வனத்துறை சார்பில், பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், பழங்குடியின மக்கள் பங்களிப்போடு நடத்தப்படுகிறது.

இயற்கை எழில் மிகுந்த பரளிக்காடு, கோவை காந்தி புரத்தில் இருந்து 70 கி.மீ., தொலைவிலும், காரமடையில் இருந்து 30 கி.மீ., தொலைவிலும் உள்ளது. சனி, ஞாயிறு, அரசு விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். https://Coimbatorewilderness.com/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக பதிவு செய்து கட்டணம் செலுத்தி செல்ல வேண்டும். பில்லுார் அணையில் பரிசல் பயணம், பழங்குடியின மக்கள் சார்பில் வழங்கப்படும் 10க்கும் மேற்பட்ட உணவு வகைகள், அத்திக்கடவு ஆற்றில் குளியல், பழங்குடியினர் வாழ்வை பிரதிபலிக்கும் பாரம்பரிய நடனம் என, வனத்துறையினர் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்கின்றனர்.

பரளிக்காடு, பூச்சமரத்துார், பில்லுார், நீராடி உட்பட பல்வேறு பழங்குடியினர் கிராமங்களில் இருந்து பரிசல் ஓட்டுநர்கள், மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் என, ஏராளமான பழங் குடியின மக்கள், இச்சூழல் சுற்றுலாவால் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

காரமடை வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் கூறியதாவது: பரளிக்காடு சூழல் சுற்றுலாவுக்கு வலு சேர்க்கும் விதமாகவும், பழங்குடியினருக்கு வேலை வாய்ப்பு அதிகாரிக்கவும், பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். தற்போது பரளிக்காடு சூழல் சுற்றுலா வாயிலாக, 80 முதல் 100 பழங்குடியினர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். இவர்களின் வாழ்வாதாரம் மேம்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள், பழங்குடியினர் பாரம்பரியத்தை அறிந்துக் கொள்ள முடிகிறது. வனத்துறைக்கும் பழங்குடியினருக்கும் இடையே நல்ல நட்புறவு உள்ளது.

பழங்குடியினர் தேவைகளை அறியவும், வனத்துறையினருக்கு இது ஒரு வாய்ப்பாக உள்ளது. பரளிக்காடு சூழல் சுற்றுலா, மக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்ற திட்டமாக மாறி வருகிறது. பரிசல் பயணம், அத்திக்கடவு ஆற்றில் குளியல் ஆகியவற்றால், சுற்றுலா பயணிகள் மீண்டும், மீண்டும் இங்கு வர ஆர்வமாக உள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.--






      Dinamalar
      Follow us