sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 ரூ.3 லட்சம் பாக்கு விற்பனை மகிழ்ச்சியும்... ஏமாற்றமும்...

/

 ரூ.3 லட்சம் பாக்கு விற்பனை மகிழ்ச்சியும்... ஏமாற்றமும்...

 ரூ.3 லட்சம் பாக்கு விற்பனை மகிழ்ச்சியும்... ஏமாற்றமும்...

 ரூ.3 லட்சம் பாக்கு விற்பனை மகிழ்ச்சியும்... ஏமாற்றமும்...


ADDED : பிப் 19, 2026 05:54 AM

Google News

ADDED : பிப் 19, 2026 05:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்: காரமடையில், அரசு வேளாண் வணிகத்துறைக்கு உட்பட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்கிழமை பாக்கு ஏலம் நடத்தப்படுகிறது. நேற்று முன்தினம் நடந்த பாக்கு ஏலத்துக்கு, ஒன்பது விவசாயிகள், 30 குவிண்டால் பாக்கு மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

ஒரு கிலோ வரப்பாக்கு குறைந்தபட்ச விலை, 180 ரூபாய்க்கும், அதிகபட்ச விலை, 211 ரூபாய்க்கும் ஏலம் போனது. கடந்த வாரத்தை விட, கிலோவுக்கு 11 ரூபாய் கூடுதலாக விலை கிடைத்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பச்சைப் பாக்கு குறைந்த விலை 55 க்கும், அதிகபட்ச விலை 75 ரூபாய்க்கும் ஏலம் போனது. உரித்த ராசி ரகம் குறைந்த விலை, 400 ரூபாய்க்கும், அதிக விலை 440 ரூபாய்க்கும் ஏலம் போனது. கடந்த வாரத்தை விட, இந்த வாரம் உரித்த ராசி பாக்கு கிலோவுக்கு இருபது ரூபாய் குறைந்து ஏலம் போனதால், ஏமாற்றம் அடைந்தனர். மொத்தமாக, ரூ.3 லட்சம் மதிப்பிலான பாக்குகள் விற்பனை ஆனது என, ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் யுவராஜ் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us