ADDED : நவ 20, 2025 02:39 AM
அ நிறம் | அளவு
கோவை: ஜெ.எஸ்.எஸ். இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவமனை சார்பில், உலக இயற்கை மருத்துவ விழிப்புணர்வு பேரணி நடந்தது.
ரேஸ்கோர்ஸ் சாலையில் மருத்துவமனை டாக்டர்கள், பயிற்சி மருத்துவ மாணவர்கள் பதாகைகளை ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியும் இயற்கை மருத்துவத்தின் அவசியம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணியில், முதல்வர் மற்றும் தலைமை மருத்துவர் திலீப், சக டாக்டர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
