/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நவபாரத் சர்வதேச பள்ளி நிறுவனர் தின விழா
/
நவபாரத் சர்வதேச பள்ளி நிறுவனர் தின விழா
ADDED : ஏப் 23, 2025 11:02 PM

அன்னுார், ; அன்னுார்-சத்தி சாலையில் உள்ள நவபாரத் சர்வதேச பள்ளியில் நிறுவனர் தின விழா நேற்று நடந்தது. பள்ளி சேர்மன் ரகுராமன் தலைமை வகித்தார். பள்ளி செயலர் நந்தகுமார், நிர்வாக அறங்காவலர் நித்தியானந்தம் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். பொருளாளர் சண்முகசுந்தரம் அனைவருக்கும் கேக் வழங்கினார்.
நிர்வாகிகளுக்கு சிறப்பு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. நிர்வாக சிறப்பு தன்மையை வெளிப்படுத்தும் பாடல்கள் பாடப்பட்டன. நகைச்சுவை கலந்த விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.கடந்த 14 ஆண்டுகளில் தேசிய அளவிலும், மண்டல அளவிலும் கல்வி, விளையாட்டு மற்றும் போட்டித் தேர்வுகளில் பள்ளி அடைந்த சாதனைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது.
பள்ளி அறங்காவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

