/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நவபாரத் நேஷனல் பள்ளி 18ம் ஆண்டு விழா
/
நவபாரத் நேஷனல் பள்ளி 18ம் ஆண்டு விழா
ADDED : டிச 03, 2024 06:38 AM

அன்னுார்; அன்னுார் நவபாரத் நேஷனல் பள்ளி ஆண்டு விழா கலை நிகழ்ச்சியில் மாணவர்கள் அசத்தினர்.
அன்னுார் நவ பாரத் நேஷனல் பள்ளி 18ம் ஆண்டு விழா நேற்று முன்தினம் நடந்தது. பேண்ட் வாத்தியத்துடன் விழா துவங்கியது. மழை காரணமாக பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் ஆன்லைன் வாயிலாக பேசி மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.
பள்ளி சேர்மன் ரகுராம் வரவேற்றார். பள்ளி முதல்வர் சந்திரன் ஆண்டறிக்கை வாசிக்கையில், ''மாநில அளவிலும், தேசிய அளவிலும் இப்பள்ளி மாணவர்கள் கல்வி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் அதிக இடம் பிடித்துள்ளனர், என்றார்.
கடந்த ஆண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மொபைலுக்கு மாணவர்கள் அடிமை ஆகாமல் தங்கள் பணிகளை தாங்களே செய்து கொள்ள பயிற்சி அளிக்கப்படுகிறது என அறங்காவலர்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பள்ளி அறங்காவலர் மாணிக்கவேல், பரிசு பெற்ற மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோரை வாழ்த்தி பேசினார். மாணவ, மாணவியர், பெற்றோர் பங்கேற்றனர்.