தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நவபாரதி விருது வழங்கும் விழா

 நவபாரதி விருது வழங்கும் விழா

 நவபாரதி விருது வழங்கும் விழா


ADDED : பிப் 22, 2026 06:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 22, 2026 06:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: பாரதி பாசறை அறக்கட்டளை சார்பில், நவபாரதி விருது வழங்கும் விழா, ராம்நகர் சபர்பன் பள்ளியில் நடந்தது.

விழாவில் சபர்பன் கல்வி நிறுவனங்களின் தலைவரும் சீனியர் வக்கீலுமான நாகசுப்ரமணியம் பேசுகையில்,''நம் நாடு பிற நாடுகளுக்கு வழிகாட்டியாக இருக்கும் என்று பாரதி சொன்னது தற்போது நடக்கிறது. அவரது படைப்புகளை வாசித்து, அதை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டும்,'' என்றார்.

பாரதி பாசறை தலைவர் மோகன்சங்கர் பேசுகையில், ''பாரதியின் நிமிர்ந்த நடையையும், நேர்கொண்ட பார்வையையும் மாணவர்கள் பின்பற்ற வேண்டும். தமிழை பேசுங்கள், போற்றுங்கள், பாராட்டுங்கள். தமிழ் என்றும் உலகில் நிலைத்து நிற்க வேண்டும்,'' என்றார்.

சபர்பன் பள்ளி தாளாளர் பிருத்திவி, பாரதி பாசறை நிறுவனர் ரமணிசங்கர், பாசறை அறங்காவலர்கள் ஜெகன், ரவீந்தரன், பாரதியார் பல்கலை தமிழ்த்துறை பேராசிரியர் சித்ரா, தலைமை ஆசிரியர் ஹேமாகார்த்திக் பங்கேற்றனர். கவிதை, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பாரதியார் சிலை பரிசாக வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us