/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோலாகலமாக நடந்த நவராத்திரி உற்சவம்
/
கோலாகலமாக நடந்த நவராத்திரி உற்சவம்
ADDED : அக் 03, 2025 09:46 PM

கோவை: சம்ஸ்கிருதம், ரிக் வேதம், கிருஷ்ண யஜுர்வேதம் ஆகியவற்றில், விரிவான கற்பித்தல் திட்டத்தை வேதபாடசாலை குருகுலம் வழங்கி வருகிறது.
ஒவ்வொரு ஆண்டையும் போல, சரத்கால நவராத்திரி மகா உற்சவம் மரபின்படி சிறப்பாக நடைபெற்றது. வேதபாடசாலை மேலாண்மை அறங்காவலர் ரவி சாம், மாணவர்கள் இணைந்து முழு உற்சவம் மற்றும் திருவீதி உலாவை நடத்தினர். மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இறுதி நாளான, அக். 2ம் தேதி திருவீதி உலாவில் பாரம்பரிய கலைஞர்களின் கலை நிகழ்வுகள் நடந்தன. தமிழ்நாடு குழுக்கள் சார்பில் புலியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் ஆகியவை நடந்தன. கேரள குழுக்கள் சார்பில் தய்யம், கருடன் ந்ருத்தம், திரையாட்டம், கும்மாட்டி, தம்போலம் நடத்தப்பட்டன.
கர்நாடகா குழுக்கள் சார்பில் டோல்லு குனித, விர்கேஷ் குனித, கரடே கொம்பே ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப் பட்டன.