/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ப்ரோசோன் மாலில் தீபாவளிக்கு பரிசுகள்
/
ப்ரோசோன் மாலில் தீபாவளிக்கு பரிசுகள்
ADDED : அக் 03, 2025 09:46 PM
கோவை ; சத்தி ரோட்டில் உள்ள ப்ரோசோன் மாலில், தீபாவளியை முன்னிட்டு ஷாப்பிங் செய்வோருக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகின்றன. போட்டிகளும் நடத்தப்படுகின்றன.
வாடிக்கையாளர்கள் வாசகம் எழுதும் போட்டியில் பங்கேற்று, 35 லட்சம் ரூபாய் வரையிலான பரிசு பெறலாம் . கார், பைக், வீட்டு உபயோகப் பொருட்கள், வெளிநாட்டு சுற்றுலா வார இறுதி நாள் வாய்ப்புகள், உடனடி பரிசுகள் வழங்கப்படுகின்ற ன. குழந்தைகளை கவரும் வகையில், டைனோசர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. புதிய விளையாட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பரவசமடையச் செய்யும் சவால் மிக்க விளையாட்டுகளையும் விளையாடலாம். துவக்க விழாவில், ப்ரோசோன் மையத்தின் தலைவர் அம்ரிக் பனீசர், செயல் இயக்க பிரிவு தலைவர் முசாமில், நிதி பிரிவு தலைவர் சிவக்குமார், தொழில்நுட்பத் தலைவர் ஈஸ்வந்த்ரா, சந்தை பிரிவு தலைவர் பிரின்ஸ்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.