/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தினமலர்' சார்பில் இன்று முதல் நவராத்திரி கொலு திருவிழா
/
'தினமலர்' சார்பில் இன்று முதல் நவராத்திரி கொலு திருவிழா
'தினமலர்' சார்பில் இன்று முதல் நவராத்திரி கொலு திருவிழா
'தினமலர்' சார்பில் இன்று முதல் நவராத்திரி கொலு திருவிழா
ADDED : செப் 21, 2025 11:23 PM
கோவை; நவராத்திரி கொலு விழா துவங்குவதையொட்டி, 'தினமலர்' நாளிதழ் சார்பில், இன்று முதல் வீடுகளுக்கு 'கொலு விசிட்' துவங்குகிறது.
புரட்டாசி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாள் துவங்கி, ஒன்பது நாட்கள் நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
அதன்படி, இந்தாண்டு நவராத்திரி விழா இன்று துவங்குகிறது. அக்.,1ல் சரஸ்வதி பூஜை, அக்., 2ல் விஜயதசமி கொண்டாடப்படுகிறது.
நவராத்திரியை முன்னிட்டு, வீடுகள், கோயில்களில், கொலு வைத்து வழிபடுவது வழக்கம்.
கோவையில், வாசகர்கள் தங்களது இல்லங்களில் அமைக்கப்படும் நவராத்திரி கொலுவை பார்வையிடுவதற்கு, 'தினமலர்' குழுவினர் இன்று (செப்., 22) முதல் நேரில் விசிட் செய்கின்றனர்.
கொலு குறித்த தகவலை, 98940 09310 என்ற எண்ணில் காலை 10:00 முதல், மதியம் 12:00 மணிக்குள், முன்பதிவு செய்ய வேண்டும். 'தினமலர்' குழுவினர் நேரில் ஆய்வு செய்வர்.
பி.என்.புதுார் மற்றும் வடவள்ளி பகுதிகளுக்கு, இன்றும் (செப்., 22) ஆர்.எஸ்.புரம், செல்வபுரம், பேரூர் பகுதிக்கு நாளையும்(செப்.23) வருகின்றனர். இந்நிகழ்ச்சியை, மெடிமிக்ஸ், மேளம், ரெஜூ ஆயுர், லயா காபி ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்துகின்றன.