/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குளங்கள் துாய்மை பணியில் என்.சி.சி., மாணவர்கள் சிறப்பு
/
குளங்கள் துாய்மை பணியில் என்.சி.சி., மாணவர்கள் சிறப்பு
குளங்கள் துாய்மை பணியில் என்.சி.சி., மாணவர்கள் சிறப்பு
குளங்கள் துாய்மை பணியில் என்.சி.சி., மாணவர்கள் சிறப்பு
ADDED : ஜன 29, 2025 11:12 PM

கோவை; 2 டி.என்., காம்போசிட் தொழில்நுட்ப கம்பெனி என்.சி.சி., சார்பில், குளங்கள் அசுத்தப்படுத்துவதை தடுக்கும் விதத்தில், விழிப்புணர்வு பேரணி மற்றும் துாய்மை பணியை, என்.சி.சி., மாணவர்கள் மேற்கொண்டனர்.
புனித் சாகர் அபியான் எனும் திட்டத்தின் கீழ், குளக்கரையில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் என்.சி.சி., மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி, நேற்று நடத்தது.
கோவை வாலாங்குளம் கரையில் கொட்டப்பட்டுள்ள கழிவுகள், குப்பைகளை என்.சி.சி., மாணவர்கள் அகற்றினர். குப்பை கொட்டுவதால் குளங்கள் மாசடைவதை தடுக்க, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
முன்னதாக, குளங்களை அசுத்தம் செய்யக்கூடாது, பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க வேண்டும் உள்ளிட்ட விழிப்புணர்வு பதாகைகளுடன், மாணவர்கள் பேரணியில் ஈடுபட்டனர். பொதுமக்களிடம் விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன.
2 டி.என்., காம்போசிட் தொழில்நுட்ப கம்பெனி என்.சி.சி., ஆபிஸர் கமாண்டிங் லெப்டினன்ட் கர்னல் தீபக் தலைமை வகித்தார். கோவையை சேர்ந்த ஒன்பது பள்ளிகளை சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

