ADDED : பிப் 14, 2026 05:19 AM

அ நிறம் | அளவு
காரமடை: தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தை, சீர்குலைக்க முயலும் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், காரமடை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மேட்டுப்பாளையம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. செல்வராஜ் தலைமை வகித்தார். 'ஏமாற்றாதே ஏமாற்றாதே, வஞ்சிக்காதே வஞ்சிக்காதே ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்காமல் வஞ்சிக்காதே' என தி.மு.க. அரசை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.----
