தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/என்.டி.சி., மில் தொழிலாளர்கள் போராட்டம் தற்காலிமாக வாபஸ்

என்.டி.சி., மில் தொழிலாளர்கள் போராட்டம் தற்காலிமாக வாபஸ்

என்.டி.சி., மில் தொழிலாளர்கள் போராட்டம் தற்காலிமாக வாபஸ்


UPDATED : அக் 27, 2026 08:48 PM

ADDED : அக் 27, 2026 08:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 27, 2026 08:48 PM ADDED : அக் 27, 2026 08:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:

இரு நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த என்.டி.சி., மில் தொழிலாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.

கொரோனா காலத்தில் மூடப்பட்ட என்.டி.சி., மில்கள் திறக்கப்படவில்லை. வாட்ச்மேன், பவர் ஹவுஸ் பணியாளர்கள் மற்றும் என்.டி.சி., மின் துணிக்கடைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு, 13 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. பணியில் இல்லாதவர்களுக்கு பாதி சம்பளம் வழங்கப்பட்டது. அதுவும் இப்போது நிறுத்தப்பட்டுள்ளது.

2025க்கு பிறகு ஓய்வு பெற்றவர்களுக்கு பணிக்கொடை வழங்கவில்லை. ஆறு ஆண்டுகளாக தீபாவளி போனசும் வழங்கவில்லை. நிலுவையில் உள்ள சம்பளத் தொகையை வழங்க வேண்டும் என்றும், மில்லை மீண்டும் திறக்க வேண்டும் எனவும், இரு நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்கள், நேற்று போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.

‘‘மில் நிர்வாகத்துடன் டில்லியில் நடந்த பேச்சு வார்த்தையில், ஒரு மாத சம்பளத்தை இந்த மாதம் வழங்குவதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பளத்தை பெற்றுக்கொண்டு, தீபாவளி முடிந்த பிறகு மீண்டும் போராட்டத்தை தொடர அனைத்து சங்கங்களும் முடிவு எடுத்துள்ளதால், தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெற்று இருக்கிறோம்’’ என்று சி.ஐ.டி.யூ.,மாவட்ட துணை பொதுச்செயலாளர் ராஜேந்திரன் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us