/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நெ.10. முத்துாரில் ரேக்ளாவில் சீறிப்பாய்ந்த காளைகள்
/
நெ.10. முத்துாரில் ரேக்ளாவில் சீறிப்பாய்ந்த காளைகள்
நெ.10. முத்துாரில் ரேக்ளாவில் சீறிப்பாய்ந்த காளைகள்
நெ.10. முத்துாரில் ரேக்ளாவில் சீறிப்பாய்ந்த காளைகள்
ADDED : நவ 24, 2024 11:20 PM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, நெ.10. முத்துாரில் ரேக்ளா பந்தயம் நேற்று நடந்தது.
கிணத்துக்கடவு, நெ.10. முத்துார் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், ஊராட்சித்தலைவர் சதீஷ்குமார் ஏற்பாட்டில் ரேக்ளா பந்தயம் நடந்தது.
நிகழ்ச்சியை, கிணத்துக்கிடவு மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் துவக்கி வைத்தார்.
இதில், ரேக்ளா சங்கத்தைச்சேர்ந்தவர்கள், தி.மு.க., வினர் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
ரேக்ளாவில், 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இதில், 200 மற்றும் 300 மீட்டர் என இரண்டு பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது.
போட்டியில், வெற்றி பெற்ற காளைகளுக்கு, முதல் பரிசாக 50 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக, 25 ஆயிரம், மூன்றாம் பரிசாக, 15 ஆயிரம், 4 முதல் 10 வது இடம் பிடித்த காளைகளுக்கு, 5 ஆயிரமும் வழங்கப்பட்டது.
மற்றும் 30 காளை களுக்கு, கோப்பை வழங்கப்பட்டது.