ADDED : ஏப் 29, 2025 09:19 PM
அ நிறம் | அளவு
மடத்துக்குளம்; மடத்துக்குளம் அமராவதி ஆற்றுப்பாலத்தில், மின்விளக்குகள், பிரதிபலிப்பான் அமைக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், மடத்துக்குளம் அருகே அமராவதி ஆற்றுப்பாலம் உள்ளது. இப்பாலம் வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இப்பாலத்தில், இரவு நேரங்களில் பாதசாரிகள், வாகன ஓட்டுநர்களுக்கு பயனளிக்கும் வகையில், மின்விளக்குகள், பிரதிபலிப்பான் அமைக்க, பொதுப்பணித்துறையினரும், பேரூராட்சி நிர்வாகத்தினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
