ADDED : ஆக 17, 2026 05:23 AM
அ நிறம் | அளவு
சுந்தராபுரம்: சுந்தராபுரம் - பொள்ளாச்சி சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை வசதி இல்லாததால், தினமும் நுாற்றுக்கணக்கான பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த பஸ் நிறுத்தத்தை மாணவர்கள், முதியவர்கள், பெண்கள், அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
கோடை வெயில் மற்றும் மழைக்காலங்களில் பயணிகள் காத்திருக்க இடமின்றி, அருகே உள்ள கடைகளின் முன் ஒண்ட வேண்டிய அவலம் ஏற்படுகிறது.
குறிப்பாக, பள்ளி, கல்லுாரி மாணவர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் அதிக சிரமத்தை சந்திப்பதாக இப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். ஆகவே இங்கு அமர வசதியுடன் நிரந்தர நிழற்குடை, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதியை உடனடியாக ஏற்படுத்த வேண்டும்.
