/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அடிப்படை வசதி வேண்டும்: ரங்கநாதபுரம் மக்கள் கோரிக்கை
/
அடிப்படை வசதி வேண்டும்: ரங்கநாதபுரம் மக்கள் கோரிக்கை
அடிப்படை வசதி வேண்டும்: ரங்கநாதபுரம் மக்கள் கோரிக்கை
அடிப்படை வசதி வேண்டும்: ரங்கநாதபுரம் மக்கள் கோரிக்கை
ADDED : ஜன 28, 2025 11:42 PM

பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், நாயக்கன்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பாலமலை மலை அடிவாரத்தில் ரங்கநாதபுரம் உள்ளது. இங்கு உள்ள, 16 வீடுகளில் பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர்.
பழுதான, இடியும் நிலையில் உள்ள இவ்வீடுகளை முழுவதுமாக அகற்றிவிட்டு, புதிய வீடுகளை கட்டித் தர அரசு நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை என, இப்பகுதி மக்கள் புலம்புகின்றனர்.
இதுகுறித்து, பழங்குடியின மக்கள் கூறுகையில், ''நாயக்கன்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து இடங்களிலும், அத்திக்கடவு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. ஆனால், எங்களுக்கு ஆழ்குழாய் தண்ணீர் மட்டும் வருகிறது.
இங்கு தெரு நாய் தொல்லை அதிகரித்து விட்டது. இப்பகுதியில் பழங்குடியின மக்களுக்கான சுடுகாடு இல்லை. எங்களில் யாராவது ஒருவர் இறந்தால், சடலத்தை, 3 ஆயிரம் ரூபாய் செலவழித்து, வேனில் பாலமலைக்கு கொண்டு சென்று, அங்குள்ள பழங்குடியினருக்கான மயானத்தில் புதைக்க வேண்டி உள்ளது. இப்பகுதியில், 60 சென்ட் புறம்போக்கு காலி இடம் உள்ளது.
அதை மயானமாக மாற்றி தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றனர்.

