/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முடிதிருத்துவோருக்கு சட்ட பாதுகாப்பு தேவை மாநில பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
/
முடிதிருத்துவோருக்கு சட்ட பாதுகாப்பு தேவை மாநில பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
முடிதிருத்துவோருக்கு சட்ட பாதுகாப்பு தேவை மாநில பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
முடிதிருத்துவோருக்கு சட்ட பாதுகாப்பு தேவை மாநில பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
ADDED : ஜன 31, 2024 10:45 PM

பொள்ளாச்சி-'சினிமா'க்களில், முடிதிருத்துவோரை தவறாக சித்தரித்து காட்டக்கூடாது,'என அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்ற கழக மாநில தலைவர் தெரிவித்தார்.
பொள்ளாச்சியில், அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கணேசன் தலைமை வகித்தார். கோவை மாவட்ட அமைப்பாளர் மணிகண்டன், இளைஞரணி செயலாளர் அருள்பிரசாத் முன்னிலை வகித்தனர். செயலாளர் அருண்குமார் வரவேற்றார். பொருளாளர் ராஜ்குமார் நன்றி கூறினார்.
மாநில பொதுச் செயலாளர் இளங்கோவன், மாநில பொருளாளர் ஜெயரட்சகன் உள்ளிட்டோர் பேசினர்.
மாநில தலைவர் ரமேஷ் பேசுகையில், ''ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும், மகளிர் மேம்பாடு, மிகவும் பின்தங்கிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்ற கழகம் முன் நிற்கும். 'டிவி' மற்றும், 'சினிமா'க்களில் முடி திருத்துபவர்களை தவறாக சித்திரித்து காட்டக்கூடாது. அவ்வாறு செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும்,'' என்றார்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தமிழகத்தில், ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்தி, மருத்துவர், வண்ணார், குயவர், குலாலர் சமுதாயத்துக்கு உள் ஒதுக்கீடாக, ஐந்து சதவீதம் வழங்க அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.திருநங்கைளுக்கு சம நிலையில் அனைத்து உரிமைகளும், பாதுகாப்பும் பெற்றுத்தந்திட போராடுவோம்.
முடிதிருத்தும் தொழிலாளர்கள், சலவை தொழிலாளர்கள், இசை கலைஞர்கள், மண்பாண்ட தொழிலாளர்கள் ஆகியோருக்கு சட்ட பாதுகாப்பு வழங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாரம்பரிய மரபு வழி சித்த வைத்தியத்தில், மருத்துவ சமூக மக்களுக்கு முன்னுரிமை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட, 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.