/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'சி.எம்.சி., காலனியில் குடியிருப்பு வேண்டும்'
/
'சி.எம்.சி., காலனியில் குடியிருப்பு வேண்டும்'
ADDED : மார் 17, 2024 12:22 AM
கோவை:சி.எம்.சி., காலனியில் குடியிருப்புகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்குமாறு, மாநகராட்சி கமிஷனரிடம் துப்புரவு பணியாளர்கள் சங்கத்தினர், மனு அளித்துள்ளனர்.
கோவை, சித்தாபுதுார் சி.எம்.சி., காலனி மற்றும் குடிசைப்பகுதி துப்புரவு பணியாளர்கள் நலச்சங்க செயலாளர் முருகேசன், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் அளித்த மனுவில், 'மாநகராட்சி, 67வது வார்டு சித்தாபுதுார், வி.கே.கே., மேனன் மெயின் ரோட்டில் உள்ள சி.எம்.சி., காலனியில், 80 ஆண்டுகளுக்கும் மேலாக, 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம்.
மூன்று தலைமுறையாக வசித்துவரும் எங்களுக்கு, இதே இடத்தில் குடியிருப்புகள் கட்டித்தரவும், அதே பகுதியில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வாயிலாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளில், வீடு ஒதுக்கவும் பரிந்துரைக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

