தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சிட்பண்ட்ஸ் சட்ட திருத்தம் அவசியம்

சிட்பண்ட்ஸ் சட்ட திருத்தம் அவசியம்

சிட்பண்ட்ஸ் சட்ட திருத்தம் அவசியம்

1


ADDED : ஆக 20, 2026 05:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 20, 2026 05:11 PM

1


1
Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: தமிழ்நாடு சிட்பண்ட்ஸ் கம்பெனிஸ் அசோசியேசன், இன்கார்ப்பரேட்டட் சிட்பண்ட்ஸ் அசோசியேசன் சார்பில், சிட்பண்ட்ஸ் தின விழா சென்னையில் நடந்தது.

அசோசியேசன் தலைவர் சிற்றரசு தலைமை வகித்தார். செயலாளர் கார்த்திக், பொருளாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

பத்திரப்பதிவு துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் பேசுகையில், ‘‘பதிவு செய்யப்பட்ட சீட்டு நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பையும் அரசு வழங்கும். சீட்டு நிறுவனங்களை வங்கிகளுக்கு இணையான நிலைக்கு உயர்த்தவும், நவீன தொழில்நுட்பம் மூலம் சேவைகளை விரிவுபடுத்தவும் தேவையான உதவிகள் செய்யப்படும்,’’ என்றார்.

கோவை மாவட்ட தலைவர் தயாளன் கூறுகையில், ‘‘சட்டவிரோதமாக செயல்படும் பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சீட்டு நிறுவனங்களின் அனைத்து ஆவணங்களையும் ஆன்லைனில் பதிவு செய்யவும், தற்போதைய தேவைக்கேற்ப சிட்பண்ட்ஸ் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும்,’’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us