ADDED : ஆக 20, 2026 05:11 PM
கோவை: கோவை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் (கே.டி.எம்.ஏ.ஏ.) சார்பில் மாவட்ட தடகள போட்டிகள் செப்.,20ம் தேதி கோவை நேரு ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதில், குறைந்தபட்சம் 30 வயது முதல், 90 வயதுக்கும் அதிகமான ஆண், பெண்களும் பங்கேற்கலாம்.
இருபாலருக்கும் 100 மீ., 200 மீ., 400 மீ., 800 மீ., 1,500 மீ., 3,000 மீ., மற்றும் 5,000 மீ., ஓட்டப்பந்தயம் நடக்கிறது. தவிர, 3 கி.மீ., 5 கி.மீ., நடைபோட்டி, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் மற்றும் மும்முறை தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், சங்கிலி குண்டு எறிதல், 400 மீ., தொடர் ஓட்டம் ஆகியவை இடம்பெறுகின்றன.
இதில் தகுதி பெறுவோர் மாநில, தேசிய போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். ஆர்வம் உள்ளவர்கள் செப்., 10ம் தேதிக்குள் பதிவு செய்யலாம்; போட்டியின்போது நேரடி பதிவு அனுமதிக்கப்படாது. முன்பதிவுக்கு, 98408 59713, 86374 62914, 96887 55702 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, சங்க செயலாளர் வேலுசாமி கூறியுள்ளார்.
