ராமகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரி பாலக்காடு ஐ.ஐ.டி. புரிந்துணர்வு ஒப்பந்தம்
ராமகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரி பாலக்காடு ஐ.ஐ.டி. புரிந்துணர்வு ஒப்பந்தம்
ADDED : ஆக 20, 2026 05:11 PM
கோவை: ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லுாரி மற்றும் பாலக்காடு இந்திய தொழில்நுட்பக் கழகம் இடையே கல்வி, தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஐ.ஐ.டி., பாலக்காடு வளாகத்தில், எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
அதிநவீன தொழில்நுட்ப துறைகளில் இரு நிறுவனங்களும் இணைந்து கூட்டு ஆராய்ச்சி செய்தல், பேராசிரியர்கள், மாணவர்களிடையே புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்ப அறிவை பரிமாறிக் கொள்ளுதல், சர்வதேச, தேசிய அளவிலான ஆராய்ச்சி திட்டங்களுக்கு தேவையான நிதியுதவிகளை இணைந்து பெறுதல் ஆகியன இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம்.
பாலக்காடு ஐ.ஐ.டி., தொழிற்துறை, நிதி ஆராய்ச்சி தலைவர் அரவிந்த் அஜய், நிர்வாகப் புல முதன்மையர் பிபுரஞ்சன் சாரங்கி, மின் பொறியியல் துறை பேராசிரியர் சுக்கோமல், ராமகிருஷ்ணா கல்லுாரி முதல்வர் டேவிட் ரத்னராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
