ADDED : மார் 23, 2026 08:31 PM
அ நிறம் | அளவு
கோவை: நீட் தேர்வுக்கு அரசுப் பள்ளி மாணவர்களை தயார்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.
2026ம் ஆண்டுக்கான இளநிலை நீட் நுழைவுத் தேர்வு, வரும் மே 3ம் தேதி நடத்தப்படவுள்ளது.
கடந்தாண்டு கோவை அரசு பள்ளிகளிலிருந்து 300க்கும் குறைவான மாணவர்களே நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், நடப்பாண்டு 620 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த மாணவர்களுக்கு பயிற்சி வழங்க, மையங்கள் அமைக்கப்படவுள்ளன.
இம்மையங்களில், அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் வாயிலாக பயிற்சியளிக்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
