/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதலாமாண்டு மாணவர்களுக்கு நேரு கல்லுாரியில் வரவேற்பு
/
முதலாமாண்டு மாணவர்களுக்கு நேரு கல்லுாரியில் வரவேற்பு
முதலாமாண்டு மாணவர்களுக்கு நேரு கல்லுாரியில் வரவேற்பு
முதலாமாண்டு மாணவர்களுக்கு நேரு கல்லுாரியில் வரவேற்பு
ADDED : ஜூன் 24, 2025 11:20 PM

கோவை; கோவை நேரு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 27வது இளங்கலை முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா நடந்தது. நேரு கல்வி குழுமத்தின் தலைவர் கிருஷ்ணதாஸ் தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, எஸ்.பி., கார்த்திகேயன் பேசுகையில், ''ராகிங், பைக்ரேசில் ஈடுபடுவது, போதைப் பொருள் பயன்படுத்துவது போன்ற குற்றங்களில் ஈடுபட்டால், எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும். பெற்றோர், மாணவர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து, சந்தேகம் இருப்பின் கல்லுாரி நிர்வாகத்தை உடனே அணுக வேண்டும்,'' என்றார்.
இந்திய விமானப்படை விங் கமாண்டர் சுதான் ராய், பாலக்காடு அவிஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் தரக்கட்டுப்பாட்டு மேலாளர் நுார் பெரின்ஷா ஆகியோரும், மாணவர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கினர்.
நேரு கல்வி குழும நிறுவனங்களின் செயலாளர் கிருஷ்ணகுமார், கல்வி மற்றும் நிர்வாக இயக்குநர் நாகராஜா, பி.கே., தாஸ் பல்கலையின் நியமன பதிவாளர் அனிருதன், நேரு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் விஜயகுமார் பங்கேற்றனர்.