நேரு கல்வி குழுமம் சார்பில் நிகர்நிலை பல்கலை துவக்கம்
நேரு கல்வி குழுமம் சார்பில் நிகர்நிலை பல்கலை துவக்கம்
ADDED : ஜூலை 01, 2026 02:13 AM

கோவை: நேரு கல்வி குழுமம் சார்பில், பி.கே.தாஸ் சமூக அறிவியல், சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (தனிச்சிறப்பு பிரிவின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட நிகர்நிலைப் பல்கலை) துவங்கப்பட்டுள்ளது.
நேரு கல்விக் குழுமத்தின் நிறுவனத் தலைவர் மறைந்த பி.கே.தாஸ்- தொலை நோக்குப் பார்வையை நிறைவேற்றும் வகையில் இப்பல்கலை துவங்கப்பட்டுள்ளது. தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகாரக் குழுவின் அங்கீகாரம், தேசிய நிறுவனத் தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றதுடன், தேசிய அங்கீகார வாரியத்தின் அங்கீகாரம் பெற்ற பல்வேறு பாடத்திட்டங்களை வழங்கி வருகிறது.
புதிய பல்கலையில், மூன்று பாடப் பிரிவுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 2026 --27 கல்வியாண்டு முதல் கல்வித் திட்டங்களைத் துவங்க அனுமதி பெறப்பட்டுள்ளது. கல்விசார் மேன்மை, ஆராய்ச்சி, புதுமை, தொழில் முனைவு மற்றும் சமூக முன்னேற்றத்தை இலக்காகக் கொண்ட பன்முகக் கல்வி நிறுவனமாக உருவாக்கப்பட்டுள்ளதாக, நேரு கல்விக் குழுமம் தெரிவித்துள்ளது.
