ADDED : ஜூலை 01, 2026 02:13 AM

கோவை: புலியகுளம் அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லுாரியில்2022-25 கல்வியாண்டுக்கானபட்டமளிப்பு விழா நேற்று நடந்தது.முதல்வர் அனுஸ்மிதா செபஸ்டியன் தலைமை வகித்தார்.
கல்லுாரிக் கல்வி இணை இயக்குனர் செண்பக லெட்சுமி பேசுகையில், ''கழுகு போல், வாழ்க்கையில் எத்தனை தடைகள், திசை திருப்பல்கள் வந்தாலும், இலக்கில் இருந்து நாம் கவனம் சிதறக் கூடாது. புயல் காற்று வீசும் போது மற்ற பறவைகள் ஒதுங்கிக் கொள்ளும். ஆனால் கழுகு, அக்காற்றையே பயன்படுத்தி இன்னும் உயரமாகப் பறக்கும். அதுபோல, மனிதர்களும் தடைகளைக் கண்டு அஞ்சாமல், அவற்றை வெற்றிக்கான வாய்ப்புகளாக மாற்றிக் கொள்ள வேண்டும்,'' என்றார்.
தமிழ், ஆங்கிலம், கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் வணிகவியல் துறைகளைச் சேர்ந்த 180 மாணவிகளுக்குபட்டங்கள் வழங்கப்பட்டன. பேராசிரியர்கள், பெற்றோர் திரளாக பங்கேற்றனர்.
